கதாநாயகியை மையப்படுத்தி நகரும் படம் 'Gangs Of மெட்ராஸ்'. பீட்சா, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய சி.வி.குமார்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார்.
இதில் முதல் முறையாக தமிழில் கதநாயகியாக பிரியங்கா ரூத் அறிமுகமாகியுள்ளார். வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் 'Gangs Of மெட்ராஸ்' படத்தின் முன்னோட்டப் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலில் சீனியர், ஜுனியர் பெண் மீது காதல் வயப்பட்டு கானா பாடல் பாடுவது போன்று உள்ளது.