2009இல் வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஹாலிவுட் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கால் கடோட். இஸ்ரேல் மாடல் அழகி, மிஸ் இஸ்ரேல் என்ற அடையாளத்துடன் ஹாலிவுட் திரையுலகில் தடம்பதித்த இவர், பேட்மேன் v சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் திரைப்படம் மூலம் புகழ் பெற்றார்.
கிரிமினல், திரிப்பிள் 9, வொண்டர் வுமன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார்.
இந்த நிலையில், வொண்டர் வுமன் பட வரிசையில் தற்போது 'வொண்டர் வுமன் 1984' என்ற பிரமாண்ட சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தப்படத்தின் 2 நிமிட டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. தங்க கவசத்திலான உடை தரிந்து சீறிப்பாயும் காட்சிகள் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.