கார்த்திக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விபின் நடிப்பில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் "ஞேயங் காத்தல் செய்". பாரதியின் புதிய ஆத்திச்சூடி வரிதான் இந்த ஆல்பத்தின் பெயர்.
நண்பர்கள் தின ஸ்பெஷல் - சிம்பு குரலில் வெளியான பாடல்! - நடிகர் சிம்பு
நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் சிம்பு பாடியுள்ள ஆல்பம் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
சிம்பு
ஆம்... பாரதியின் வரிகள் மீது இளைஞர்களுக்கு எப்போதும் தனிப்பற்று உண்டு. அதை மேலும் சிறப்பிக்கும் வகையில், இந்த பாடல் உருவாகியுள்ளனர்.
நடிகர் சிம்பு பாடியுள்ள இப்பாடலுக்கு, ஸ்ரீநாத் பிச்சசை இசையமைத்துள்ளார். பாடல் இன்று (ஆகஸ்ட் 02) நண்பர்கள் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இப்பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.