இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில், 'எதற்கும் துணிந்தவன்' என்கிற திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகவுள்ளது.
ஏற்கெனவே சூர்யாவின் 'சூரரைப் போற்று, ஜெய் பீம்' என இரண்டு திரைப்படங்களும் நேரடியாக ஓடிடியில் வெளியானதால், அவரது ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர்.
இந்நிலையில், இந்தத் திரைப்படம் கண்டிப்பாக திரையரங்குகளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் முதல் பாடலாக ’வாடா தம்பி’ பாடலை படக்குழு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பாடல்,வளைதளங்களிலும்,ரசிகர்கள் மத்தியுலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஜி வி பிரகாஷ் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க:பொங்கல் விடுமுறையை குறிவைத்த ஹிப்ஹாப் ஆதி