சமீபத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ திரைப்படம் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட்டானது. அவர் தனது நடிப்பில் உருவான ‘ராக்கி’ படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் அவர் எழுதி இயக்கிய ‘ஓம்’ என்னும் படத்தை ‘மீண்டும் ஒரு மரியாதை’ எனப் பெயர் மாற்றம் செய்து போஸ்டர் வெளியிட்டுள்ளார்.
படத்தின் பெயரை மாற்றி போஸ்டர் விட்ட பாரதிராஜா - பாரதிராஜா
பாரதிராஜா தான் எழுதி இயக்கிய படத்தின் பெயரை மாற்றி போஸ்டர் வெளியிட்டுள்ளார்.
பாரதிராஜா, நக்ஷத்ரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘ஓம்’. ஓம் என்றால் ஓல்ட் மேன் (OM - Old man) எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் டிரெய்லர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படத்துக்கு ‘மீண்டும் ஒரு மரியாதை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவின் மிகப்பெரிய பொக்கிஷம் ஏ.ஆர். ரஹ்மான்: பாரதிராஜா!