தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சேரனை கலாய்த்த கஸ்தூரி -கடுப்பான நெட்டிசன்கள் - entry for bogboss

நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளே இயக்குநர் சேரனை கலாய்த்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

kasthuri

By

Published : Aug 8, 2019, 7:46 PM IST

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ்-3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. குடும்ப பெண்கள் சீரியல் பார்ப்பதை மறந்துவிட்டு தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எதிர்பாராத விதமாக நடிகர் சரவணன் விலக்கப்பட்டது பிக்பாஸ் ஹோம் மேட்டில் இருப்பவர்களுக்கு ஆற்ற முடியாத சோகத்தை தந்தது. அவர் விலகியதற்கான காரணம் சரியாக தெரியவில்லை.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி வைல்டு கார்டில் நியூ என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த வீட்டிற்குள் செல்லமாட்டேன் என்று கூறிய கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக சென்றதை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்துவருகின்றனர். கஸ்தூரி எதற்கும் அஞ்சாமல் கருத்து தெரிவிப்பார் என்பதால் சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கஸ்தூரி இயக்குநர் சேரனை கலாய்ப்பது போல் இருப்பது நெட்டிசன்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது. மேலும், வந்தவுடன் வேலையை ஆரம்பிச்சாட்டாங்க என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details