கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு துறைகள் நஷ்டமடைந்துள்ளன. அதில் சினிமா துறையும் ஒன்று. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே, தமிழ் திரைப்படத்துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் இன்று முதல் தமிழ்நாட்டில் ஒருசில துறைகள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து இயங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதேபோன்று படங்களின் இறுதிக்கட்டப் பணிகளையும், சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அரசு அனுமதி தர வேண்டும் என்று, தென்னிந்திய திரைப்பட தயாரிப்பளர் சங்கம் வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.