’தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் பாலிவுட் நடிகை யாமி கௌதம். இவர் தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
இவர், கடந்த ஜூன் 4ஆம் தேதி ’உரி’ படத்தை இயக்கிய ஆதித்யா தாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது நடிகை யாமி கௌதம் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவும், அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்தப் பதிவில்..
“ஹலோ என் இன்ஸ்டா குடும்பத்தார், நான் அண்மையில் சில புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தேன். எனக்கு இருக்கும் தோல் வியாதியான Keratosis - Pilaris பாதிப்பை மறைக்க போஸ்ட் ப்ரொடக்ஷனுக்கு செல்லும் முன்பு நான் நினைத்தேன். பின்னர் ஹே யாமி, நீ ஏன் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளக் கூடாது? அப்படியே இருக்கட்டும்...
யாமி கௌதமின் இன்ஸ்டா பதிவு இந்த வியாதி இருந்தால் தோலில் சிறு, சிறு தடிப்புகள் போன்று இருக்கும். அது நீங்களும், பக்கத்து வீட்டு ஆன்ட்டியும் நினைப்பது போல மோசம் இல்லை. எனக்கு இந்த பிரச்னை டீனேஜில் ஏற்பட்டது. அதை குணப்படுத்த முடியாது.
பல ஆண்டுகளாக இருக்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. இன்றுதான் என் பயத்தை விட்டுவிட்டு குறைகளை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளவும், என்னைப் பற்றிய உண்மையை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவும் தைரியம் வந்தது. இந்த குறையுடனேயே நான் அழகாக உணர்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சேலையிலும் பிகினிலும் நான்தான் டாப்பு - அமலா பால் மாஸ்