தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'விக்ரம்' கமலுக்கு வில்லானகும் ஃபகத் பாசில்! - கமல்ஹாசனின் விக்ரம் பட அப்டேட்

சென்னை: கமல் நடிப்பில் உருவாகவுள்ள 'விக்ரம்' படத்தில் நடிகர் ஃபகத் பாசில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Kamal
Kamal

By

Published : Dec 7, 2020, 5:37 PM IST

'கைதி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், கரோனா தொற்று அச்சம் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ், கமலை வைத்து ’விக்ரம்’ என்ற படத்தை இயக்கவுள்ளார். கமலின் பிறந்தநாளானா நவம்பர் ஏழாம் தேதி படத்தின் டீசர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கமல் ஹாசனின் 232ஆவது படமான 'விக்ரம்' கேங்ஸ்டர் ஸ்டைலில் உருவாகவுள்ளது. ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், காவல் துறை அலுவலர்களை விருந்துக்கு அழைத்து அவர்களை வேட்டையாடுவது போன்று காட்சிகள் டீசரில் இடம்பெற்றிருந்தன. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். 2021ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இந்திய அளவிலான பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. கமலுக்கு வில்லனாக யார் நடிப்பார் என்று மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தற்போது மலையாள சூப்பர்ஹிட் நடிகர் ஃபகத் பாசில் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக 'வேலைக்காரன்' படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details