தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'எதற்கும் துணிந்தவன்' டீஸர் ரிலீஸ் எப்போது? - கோலிவுட் சினிமா அண்மைச் செய்திகள்

புத்தாண்டையொட்டி 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் டீஸர் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

'எதற்கும் துணிந்தவன்' டீஸர் ரிலீஸ் எப்போது?
'எதற்கும் துணிந்தவன்' டீஸர் ரிலீஸ் எப்போது?

By

Published : Dec 1, 2021, 8:20 PM IST

'ஜெய் பீம்' வெற்றிக்குப் பிறகு, நடிகர் சூர்யா நடிப்பில், 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் வெளியாகவுள்ளது. ஏற்கெனவே சூர்யாவின் 'சூரரைப் போற்று, ஜெய் பீம்' என இரண்டு திரைப்படங்களும் நேரடியாக ஓடிடியில் வெளியானதால், அவரது ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர்.

இந்நிலையில் ரசிகர்களின் மனக்குறையைப் போக்கும் வகையில் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி, படத்தின் டீஸரை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 1ஆம் தேதி பட புரமோஷனை தொடங்கும் விதமாக டீஸர் வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இதனால் சூர்யா ரசிகர்கள் இப்போதே மகிழ்ச்சியில் கொண்டாட்டமிடத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க:உதயநிதியுடன் கூட்டணி சேர்வது யார்?

ABOUT THE AUTHOR

...view details