தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர் அஸ்வின். இவர் தற்போது திரைத்துறையில் அடியெடுத்து வைத்துள்ளார்.
அஸ்வின் நடிக்கும் புதிய படத்திற்கு 'என்ன சொல்லப் போகிறாய்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ’டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை விளம்பரப் படங்களை இயக்கிய ஹரிஹரன் இயக்கியுள்ளார். விவேக் - மெர்வின் படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
அவந்திகா மிஸ்ரா, தேஜு அஷ்வினி ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கும் இதில், 'குக் வித் கோமாளி' பிரபலம் புகழ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இதர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.