தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய்யின் 'ஒருவிரல் புரட்சி'- கையில் எடுத்த தேர்தல் ஆணையம்!

தேர்தலில் நமது வாக்குகளை வேறு யாராவது பதிவிட்டால் 49பி பிரிவை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று 'சர்கார்' பட பாணியில் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பரப்புரையை தொடங்கியுள்ளது.

விஜய், 'சர்கார்'

By

Published : Mar 7, 2019, 5:11 PM IST

முருகதாஸ் - விஜய் கூட்டணியில் 2018ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் 'சர்கார்'. இப்படத்திற்கு ஏகப்பட்ட பிரச்னைகள் வந்தன. இலவசங்கள் வேண்டாம் என்று பேசிய இந்தப்படம் அரசியல் கட்சியினரின் எதிரப்புகளையும் சம்பாதித்தது.

அதேசமயத்தில் மக்கள் வாக்களிப்பதன் அவசியத்தை பற்றியும் இந்தப்படம் கூறியிருந்தது. விஜய் இப்படத்தில் ஒருவிரல் புரட்சி என்ற 49பி பற்றி பேசியிருந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

தற்போது இப்படத்தில் கூறியிருந்த 49பி பிரிவை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து விழிப்புணர்வு பரப்புரையை தொடங்கியுள்ளது.

அதில் உங்கள் வாக்கினை வேறு எவரும் பதிவு செய்துவிட்டால் கவலை வேண்டாம். 49பி பிரிவை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து வாக்குச் சீட்டின் மூலம் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை விஜய் ரசிகர்கள் சர்கார் படத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாக கருதி இணையதளத்தில் வைரலாக்கிவருகின்றனர். மேலும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details