தமிழ்நாடு

tamil nadu

திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது ஈஸ்வரன்!

By

Published : Jan 13, 2021, 10:00 PM IST

சிலம்பரசன் நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் திட்டமிட்டபடி நாளை (ஜனவரி 14) திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Eeswaran to be released tomorrow
Eeswaran to be released tomorrow

சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன், நந்திதா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஈஸ்வரன். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 14) திரைக்கு வர இருந்தது.

ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டு சிலம்பரசன் நடிப்பில் வெளியான "அன்பானவன் அடங்காதவன் அசராதவன்" படத்துக்கு ஏற்பட்ட இழப்பீட்டில் ரூ. 2.40 கோடியை வழங்காமல், ஈஸ்வரன் படத்தை வெளியிடக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் முறையிட்டிருந்தார்.

இதனால், ஈஸ்வரன் திரைப்படம் நாளை வெளியாகுமா என்ற சூழல் நிலவி வந்தது. இந்நிலையில், இருதரப்புக்கும் இடையே இன்று (ஜனவரி 13) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், திட்டமிட்டபடி ஈஸ்வரன் திரைப்படம் நாளை வெளியாகும் என்று படக்குழுவின் அறிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details