தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'என்னங்க சார் உங்க சட்டம்' தலைப்பை மாற்றும் எண்ணமில்லை - படக்குழு திட்டவட்டம்

'என்னங்க சார் உங்க சட்டம்' படத்தின் தலைப்பை மாற்றும் எண்ணம் இல்லையென படக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Enanga
Enanga

By

Published : Aug 24, 2021, 8:56 AM IST

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'என்னங்க சார் உங்க சட்டம்'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, நடிகர் ஜெயம் ரவி வெளியிட அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள படத்தின் மூன்று புதிய போஸ்டர்களும் படத்தின் கதையின் மையத்தைக் கூறி பெரும் ஆர்வத்தைத் தூண்டும்விதமாக அமைந்துள்ளது. இந்த மூன்று புதிய போஸ்டர்களும் சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்த அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தைப் போற்றும்படி அமைந்துள்ளது.

இப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு படம் எப்படி இருக்குமென்கிற பெரும் ஆர்வத்தை மக்களிடையே தூண்டியுள்ளது.

தயாரிப்பாளர்கள் இதனை தமிழில் புதியதாக 'Duplex' என்ற வகையில் உருவாகும் படம் என்று கூறியுள்ளனர். இந்த வகை இரட்டை நிலையில் இருப்பதைக் குறிப்பது. உதாரணத்திற்கு ஒரு வீடு இரு வாசல் என்பதே இதன் சாராம்சம். படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்கப் பொழுதுபோக்குத் தன்மையுடன்கூடிய காதல், நகைச்சுவை கலந்தது.

இரண்டாம் பகுதி சாதியினால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீவிரமாகச் சொல்வதாக இருக்கும். இப்படத்தின் மேலும் ஒரு சுவாரஷ்யமான தகவல் என்னவென்றால், படத்தின் முதல் பகுதியில் 12 சிறந்த நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் படத்தின் இரண்டாம் பகுதியில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர்.

இதில் ரோகினி கார்த்திக், ஜூனியர் பாலையா, மெட்ராஸ் மீட்டர் கோபால், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் நடித்துள்ளனர். இது முழுக்க முழுக்கப் பார்வையாளர்களைத் திரையுடன் ஒன்றிப்போகச் செய்யும் பொழுதுபோக்குப் படமாக அமையும் எனப் படக்குழு உறுதியாக நம்புகின்றது.

சமீபத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சிறப்பான திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 'என்னங்க சார் உங்க சட்டம்' திரைப்படமும் இதே கதைக்கருவில்தான் உருவாகியுள்ளது. தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாகவே, படக்குழு படத்தினை முடித்து, தணிக்கைச் (UA) சான்றிதழையும் பெற்றுவிட்டது.

இருந்தபோதிலும், படக்குழு படத்தின் தலைப்பை மாற்றப்போவது இல்லை, முதலில் வைக்கப்பட்ட அதே பெயரில் படத்தினை வெளியிடப் போகிறார்கள். படம் ஒரு பக்கத்தை சார்ந்ததாக இருக்காது. இரண்டு பக்க நியாயங்களைக் கூறுவதாக இருக்கும் எனக் படக்குழு உறுதியாகக் கூறுகிறது.

இயக்குநர் பிரபு ஜெயராம் படத்திற்காக நிறைய தரவுகளை ஆராய்ந்து அதன்படி படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார். கும்பகோணம், சென்னையைச் சுற்றிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 'பீச்சாங்கை' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த கார்த்திக், இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

படம் முழுக்க முழுக்க கதையை மையப்படுத்தி நகரும் பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும். ஹீரோ-ஹீரோயின்-வில்லனை மையப்படுத்தி நகரும் படமாக இருக்காது எனப் படக்குழு கூறியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details