வயாகாம் 18 மற்றும் ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரிக்கும் துல்கர் சல்மானின் புதிய படத்துக்கு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. தேசிங் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் ரிது வர்மா, ரக்ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
துல்கர் சல்மானின் அடுத்த படத்தின் தலைப்பு இதுதான்? - துல்கர் சல்மான்
மலையாளம் மற்றும் தமிழ்த் திரை உலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மானின் அடுத்த படத்திற்கான தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் தேசிங் பெரியசாமி, எனது முதல் படம் இந்தியாவின் முன்னணி ஸ்டுடியோக்களில் ஒன்றான வயாகாம் 18 ஸ்டுடியோஸால் வெளியிடப்படுவது என் கனவு நனவான தருணமாகக் கருதுகிறேன். மிகவும் ரசிக்கப்படக் கூடிய ஒரு ஜாலியான கதையம்சம் கொண்ட இந்தப் படம் பார்வையாளர்களை மகிழ்விக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன் என்றார்.
இதுகுறித்து படத்தின் நாயகன் துல்கர் சல்மான், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஒரு சுவாரஸ்யமான கதையாகும். இது எனது 25ஆவது படம் என்பது என்னை மேலும் சிறப்பாக உணர வைக்கிறது. இது சொல்லும் காதலைப் பார்வையாளர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.