மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். பெண்களை கவரும் சாக்லேட் பாய், கரடு முரடான போராடும் குணம் கொண்ட நாயகன், ரவுடி என கதைகளுக்கு ஏற்றார்போல் வித்தியாசப்படுத்தி நடிப்பவர் துல்கர் சல்மான். இவர் நடித்த களி, சார்லி, கம்மட்டிப்பாடம் போன்ற படங்கள் தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 'வாயை மூடி பேசவும்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான துல்கர் சல்மானுக்கு அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
கெளதம் மேனனிடம் மாட்டிக்கொண்ட துல்கர் சல்மான்..! - kannum kannum kollaiyaditha;
துல்கர் சல்மான் நடித்துள்ள 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் இயக்குநர் கெளதம் வில்லனாக தோன்றும் காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 'ஓ காதல் கண்மணி' படத்தில் நடித்தார். இந்தப்படம் ஹிட்டானதை தொடர்ந்து தற்போது 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இன்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் துல்கர் சல்மானுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படம் துல்கர் சல்மானின் 25ஆவது படமாகும்.
இந்த டிரைலரில் ஜாலியாக ஊர் சுற்றும் இளைஞராக துல்கர் தோன்றுகிறார். ரிது வர்மாவை கண்டதும் காதல், ஆட்டம் பாட்டம் கூத்து என தொடரும் கதையில் திடீர் பிரேக் இயக்குநர் கெளதம் மேனனின் எண்ட்ரி வருகிறது. இதில் கெளதம் மேனன் ஸ்டைலிஸான வில்லனாக தோன்றுகிறார். இவரிடம் இருந்து எப்படி துல்கர் அவரது காதலி, நண்பர்கள் காப்பாற்றுகிறார் என்பதே கதையாக இருக்கிறது. இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.