அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படம் 'நித்தம் ஒரு வானம்'.
பாலிவுட்டில் மிகப்பெரும் நிறுவனமாக விளங்கும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom18 studios) நிறுவனமானது தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு 'நித்தம் ஒரு வானம்' என தமிழிலும், 'ஆகாஷம்' என தெலுங்கிலும் தலைப்பிடப்பட்டுள்ளது.
தமிழில் தரமானப் படங்களை வழங்கி வரும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் (Rise East Entertainment) நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இத்திரைப்படம் நம் மனதின் நேர்மறை எண்ணங்கள், அன்பு, மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது.