திரைப்பட இயக்குநர் டி. ராஜேந்தர் சென்னையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். வாக்களித்துவிட்டு வெளியே வந்த அவரிடம், யாருக்கு வாக்களித்தோம் என்பது சரியாக காட்டுகிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்,
தேர்தல் முடிவை அடுத்த மாதம் வெளியிடுவது ஏன்..? - டி.ஆர். கேள்வி - Drector T.Rajendar
சென்னை: வேகமாக இயங்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்துக் கொண்டு, தேர்தல் முடிவினை அடுத்த மாதம் வெளியிடுவது ஏன்? என்று திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் யாருக்கு வாக்களித்தேன் என்பது எனக்கு சரியாக காட்டவில்லை. நான் இப்படித்தான் கேள்வி கேட்பேன். இப்போது இந்த பாக்சில் வாக்களித்த சின்னத்தை காட்டுகிறது. ஆனால் தேர்தல் முடிந்த பிறகு அதில் உள்ள சிப்பை மாற்றிவிட்டால் என்ன செய்வீர்கள். ஜனநாயகமான இந்திய நாட்டில் பல கட்டங்களாக தேர்தலை நடத்திவிட்டு, முடிவினை அடுத்த மாதம் வெளியிடுவது ஏன்? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வேகமாக செயல்படுவதற்காக கொண்டு வரப்பட்டது. அப்புறம் எதற்கு அடுத்த மாதம்... இதற்கு வாக்குச்சீட்டு முறையே போதுமே என தெரிவித்தார்.
.