தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வெளியாகும் முன்பே சர்ச்சைக்கு உள்ளாகும் தனுஷ் பட பாடல்! - Draupathaiyin Muttham song

சென்னை: கர்ணன் படத்தின் மூன்றாவது பாடல், அதன் தலைப்பு காரணமாக வெளியாகும் முன்பே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ்
தனுஷ்

By

Published : Mar 10, 2021, 1:15 PM IST

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’கர்ணன்’. இதில் ரெஜினா விஜயன், லால், கௌரி கிஷன், ஜிஎம்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கலைப்புலி தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ’கண்டா வரச்சொல்லுங்க’, ‘பண்டாரத்தி புராணம்’ ஆகிய பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான ’திரௌபதியின் முத்தம்’ பாடல் நாளை (மார்ச்.11) வெளியாக உள்ளதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் இப்பாடலுக்கு ’திரௌபதியின் முத்தம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது, இந்து மதத்தைத் தாக்குவது போல் உள்ளதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், மாரி செல்வராஜ் வேண்டுமென்றே இந்து மதத்தைத் தாக்குவது போல் பாடல் எடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்து வருகின்றனர்.

எனினும், சர்ச்சைகளைப் பொருட்படுத்தாமல் தனுஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ரசிகர்கள் இப்பாடலின் வரவை எதிர்நோக்கி காத்துள்ளனர்.

இதையும் படிங்க:அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details