தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'டான்' படப்பிடிப்பு எப்போது தெரியுமா? - sivakarthikeyan movie updates

'டான்' படத்தின் படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டான்
டான்

By

Published : Jul 3, 2021, 7:05 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள, 'டாக்டர்' திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், ரிலிஸூக்காக காத்திருக்கிறது.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் தற்போது, சிபி சக்ரவர்த்தி இயக்கும் 'டான்' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாகப் பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

மேலும் யோகிபாபு, சூரி, எஸ்ஜே சூர்யா, சிவாங்கி, காளி வெங்கட், பாலசரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லைக்கா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தைத் தயாரித்து வருகிறார். 'டான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம், கோயம்புத்தூரில் தொடங்கி நடைபெற்றது.

இந்நிலையில் 'டான்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:சமூக வலைதளத்தில் ஆபாச குறுஞ்செய்திகள்: சனம் ஷெட்டி புகார்!

ABOUT THE AUTHOR

...view details