தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

டாக்டர் பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? - அதிர்ச்சியில் ரசிகர்கள் - டாக்டர் வசூல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டாக்டர்
டாக்டர்

By

Published : Oct 11, 2021, 1:39 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான டாக்டர் (அக். 9) படம் சனிக்கிழமை வெளியானது. பிரியங்கா நாயகியாக நடித்துள்ள இப்படத்தை எஸ்.கே. புரொடக்ஷனுடன், கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியான டாக்டர் படத்தை பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுடன் சென்று ரசித்துவருகின்றனர்.

சிவகார்த்திகேயனுக்கும், பிரியங்காவிற்கும் இடையே திருமணம் நடைபெற இருந்தபோது, அவரைப் பிடிக்கவில்லை எனக் கூறி நாயகி திருமணத்தை நிறுத்துகிறார்.

டாக்டர்

இந்தச் சூழ்நிலையில் பிரியங்காவின் அண்ணன் மகள் காணாமல்போக, சிவகார்த்திகேயன் அவரை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதை. முழுக்க முழுக்க நகைச்சுவையாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் டாக்டர் படத்தின் முதல்நாள் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டாக்டர் படம், முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ஏழு கோடியே 45 லட்சம் ரூபாய் வசூல்செய்து சாதனைப் படைத்துள்ளது.

50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே திரையரங்குகளில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் படம் இந்த அளவு வசூலித்து, சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மீண்டும் கூட்டணி சேரும் லோகேஷ் கனகராஜ் - விஜய்

ABOUT THE AUTHOR

...view details