தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இரண்டு மாத குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யா உன்னி - Mollywood actress divya vani

நடிகை திவ்யா உன்னி தனது இரண்டு மாத குழந்தை புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இரண்டு மாத குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யா உன்னி
இரண்டு மாத குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யா உன்னி

By

Published : Mar 18, 2020, 1:51 PM IST

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஹீரோயினாக வலம்வந்தவர் திவ்யா உன்னி. இதையடுத்து தமிழில் பார்த்திபன் நடிப்பில் வெளியான 'சபாஷ்' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவர் கடந்த 2002ஆம் ஆண்டு சுதிர் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து திவ்யா, கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்காவில் வசித்துவரும் அருண் குமார் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து அங்கேயே செட்டிலானார். ஏற்கனவே திவ்யாவுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், ஜனவரி மாதம் தனக்கு மூன்றாவதாகக் பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தார். ஐஸ்வர்யா எனப் பெயரிடப்பட்டிருக்கும் குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா பிறந்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ளது. இதையொட்டி திவ்யா தனது மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ''குழந்தை பிறந்து இரண்டு மாதம் ஆகியுள்ளது. இவளுக்கு ஏற்கனவே புகைப்படத்திற்கு எப்படி போஸ் கொடுப்பது என்பது தெரிந்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார். திவ்யா வெளியிட்டுள்ள அப்புகைப்படம் சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பரவிவரும் காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுஷ்கா!

ABOUT THE AUTHOR

...view details