'ப்ளாக் விடோ' வெளியாகும் தேதி மீண்டும் தள்ளிவைப்பு - ஸ்கார்லெட் ஜோஹான்சன்
வாஷிங்டன்: ஸ்கார்லெட் ஜோஹான்சன் நடிப்பில் உருவாகியுள்ள 'ப்ளாக் விடோ' படம் வெளியாகும் தேதி தற்போது மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று அச்சம் காரணமாக உலக அளவில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பல படங்களில் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி உலக அளவில் அதிகம் எதிர்பார்த்த வார்னர் பிரதர்ஸ் 'வொண்டர் வுமன் 1984' அக்டோபரிலிருந்து கிறிஸ்துமஸ் வெளியீடாகவும் யுனிவர்சல் பிக்சர்ஸ் 'கேண்டிமேன்' அடுத்த ஆண்டுக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மார்வெல் அவெஞ்சர்ஸ் ஆனா ஸ்கார்லெட் ஜோஹான்சன் நடிப்பில் உருவாகியுள்ள 'ப்ளாக் விடோ' படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பின்படி, இந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி வெளியாக இருந்த இப்படம் அடுத்த ஆண்டு மே 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.