இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து ' எம்.எஸ். தோனி' படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை திஷா பதானி. இவர் அடிக்கடி தனது அக்கா குறித்து சமூக வலைதளங்கில் பதிவிட்டுவருகிறார். அதுமட்டுமின்றி தனது அக்கா குஷ்பூ பதானிதான் தனக்கான ரோல் மாடல் என்று பல முறை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திஷா, தற்போது தனது அக்கா குஷ்பூ பதானி ராணுவ பயிற்சி நாட்களில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தில் அவரது சகோதரி மிகவும் ஷார்ட் கூந்தலுடன், பயிற்சிக்காக தயாராகிவருகிறார்.