வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி - சூரியை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில், வெற்றிமாறன் விஜய்யை வைத்து படம் இயக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து வார இதழ் ஒன்றுக்கு வெற்றிமாறன் அளித்த நேர்காணலில், “என் பக்கம் தான் தாமதம் ஆகிறது. விஜய் தரப்புல, கைவசம் இருக்கும் படங்களை முடிச்சிட்டு வாங்கன்னு சொல்லிருக்காங்க.
இன்னைக்கு இருக்கிற சூப்பர் ஸ்டார்ல விஜய் சாரோட படம் பண்றதுக்கான வாய்ப்பிருக்கிறது ரொம்ப சந்தோஷம். அதனால், இப்போ இருக்கிற படங்களை முடிச்சிட்டு விஜய் சார்கூட படம் பண்றதுல ரொம்ப ஆர்வமா இருக்கேன்” என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.