தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

“இயக்குநர் வேலு பிரபாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” - Kollywood news

இயக்குநர் வேலு பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வாணிய செட்டியார் பேரவைத் தலைவர் ரோகினி பன்னீர்செல்வம் புகார் அளித்துள்ளார்.

வேலு பிரபாகரன்
வேலு பிரபாகரன்

By

Published : Jul 28, 2020, 3:20 PM IST

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் சமீபத்தில் குறிப்பிடச் சமுதாயத்துக்கு எதிராக யூ-டியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளார்.

இவரின் பேச்சு அந்த சமுதாய மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர் மீது தமிழ்நாடு வாணிய செட்டியார் பேரவைத் தலைவர் ரோகினி பன்னீர்செல்வம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், "பகுத்தறிவு என்பது மக்களை நேர்வழியில் எடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும். இதுபோல் அருவெறுக்கத்தக்க வகையில் பேசுவதில் அல்ல. எங்களுக்கும் பெரியார் கொள்கைகளில் உடன்பாடில்லை என்றாலும், நாங்கள் அது பற்றிப் பேசுவதில்லை, விமர்சிப்பதில்லை.

உங்களுக்குக் கொள்கை எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அடுத்தவர் மனதைப் புண்படுத்தும்படி பேச யாருக்கும் உரிமை கிடையாது. சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவதற்கும், விமர்சிப்பதற்கும் யாருக்கும் உரிமை கிடையாது . அப்படிச் செய்தால் அது அயோக்கியத்தனம். வேலு பிரபாகரனுக்கு எதிராகத் தமிழ்நாடு வாணிய பேரவை சார்பாக நாங்கள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறோம்.

இதுபோன்று சுமார் 200 இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படிச் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய வேலு பிரபாகரனைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details