தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சாதியைச் சொல்லி படம் எடுப்பவர்களை செருப்பால் அடிப்பேன்' - இயக்குநர் தருண் கோபி - தருண் கோபி படங்கள்

சாதியைச் சொல்லி படம் எடுப்பவர்களை செருப்பால் அடிப்பேன் என இயக்குநர் தருண் கோபி கூறியுள்ளார்.

Tarun Gobi
Tarun Gobi

By

Published : Feb 1, 2020, 9:39 AM IST

இயக்குநர் மின்னல் முருகன் இயக்கத்தில் அறிமுக நாயகன் கமல் கோவிந்தராஜ் தயாரித்து நடித்துள்ள படம் 'புறநகர்'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ், தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் அபி சரவணன், ஸ்டண்ட் கலைஞர் ஜாகுவார் தங்கம், படத்தின் கதாநாயகன் கமல் கோவிந்த்ராஜ், இயக்குநர் மின்னல் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புறநகர் இசை வெளியிட்டு விழாவில் தருண் கோபி

இதில் இயக்குநர் தருண்கோபி பேசுகையில், ”சினிமா இன்று சீரழிந்து விட்டது. சாதி இல்லையென்று சொல்லும் ஒரே ஊடகம் சினிமாதான் . ஆனால் இன்று சினிமாவில் சில இயக்குநர்கள் தங்கள் சாதியை உயர்த்துவதற்காகப் பிற சாதியை தாழ்த்துகிறார்கள்.

படங்களை கலைப் படமாக எடுக்க வேண்டும். சாதிப் படமாக எடுக்காதீர்கள். சாதியைச் சொல்லி படம் எடுப்பவர்களை, நான் செருப்பால் அடிப்பேன். திரௌபதி படத்திற்கு பலர் ஆதரவு தெரிவிக்கிறார்கள். எல்லோருக்குள்ளும் சாதி உணர்வு இருப்பது இதன்மூலம் தெரிகிறது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details