’வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சுசீந்திரன். இதையடுத்து ஏகப்பட்ட படங்களை இயக்கியுள்ள இவர் கடைசியாக ’சாம்பியன்’ படத்தை இயக்கினார். இந்நிலையில் இயக்குநர் சுசீந்தரன் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
கேசரி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இயக்குநர் சுசீந்திரன்!
திண்டுக்கல்: இயக்குநர் சுசீந்திரன் தனது 40வது பிறந்தநாளை குடும்பத்துடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.
இதையொட்டி அவரது சொந்த ஊரான ஒட்டன்சத்திரம், கனகம்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் தனது குடும்பத்தினருடன் கேசரி கேக் வெட்டியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமுக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் தான் சுசீந்திரன், எளிமையான முறையில் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உப்பு எதுக்கு வாயில வைக்கற...கறியை சாப்பிட வேண்டியது தானே - பிரியாணியை சொதப்பிய புரோட்டா சூரி