பிரபல குணசித்திர நடிகர் பாலாசிங் (67) உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமைனையில் இன்று அதிகாலை காலமானார். காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நேற்றைய தினமே உடல்நிலை மிக மோசமானதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். அவருக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், பாலாசிங் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலா சிங் சிறந்த நடிகர். நல்ல நண்பர். அவரது மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அவருக்காக பிரார்த்திப்போம். ஆன்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'புதுப்பேட்டை படத்தில் பாலாசிங் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவை தன் பக்கம் திருப்பி பார்க்க வைத்தவர். மேலும், செல்வராகவன் இயக்கத்தில் கடைசியில் வெளியான 'என்ஜிகே' படத்திலும் நடித்திருந்தார்.