'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்கள்' படங்களை இயக்கிய இயக்குநர் மகேந்திரன் இன்று காலை உடல்நலக் குறைவால் சென்னை பள்ளிக்கரணையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா, மணிரத்னம், நடிகைகள், சுஹாசினி, ரேவதி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மேலும், அரசியல் தலைவர்களான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.