தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'வரலாறு தெரியாதா?' - கரு.பழனியப்பனுக்கு குட்டு வைத்த இயக்குநர்

கன்னியாகுமரி: இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் கரு.பழனியப்பன் பேசி வருவது கண்டிக்கத்தக்கது என அதிமுக நட்சத்திர பேச்சாளரும், திரைப்பட இயக்குநருமான பி.சி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

director-karu-palaniyappan

By

Published : Nov 4, 2019, 9:00 PM IST

பி.சி.அன்பழகன் கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'இந்து மத கடவுள்கள் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு. வரலாறு பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் இயக்குநர் கரு.பழனியப்பன் இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது. இந்து மதம் மட்டுமல்ல, வேறு எந்த மதத்தையும் அவமதிக்கக்கூடாது.

நடிகர் ரஜினிகாந்துக்கு, மத்திய அரசு விருது அறிவித்து இருப்பது வரவேற்புக்குரியது. அவரின் உழைப்புக்கு ஏற்ற விருதாகும். இந்த விருதுக்கு அவர் தகுதியானவர்.

பி.சி.அன்பழகன் செய்தியாளர் சந்திப்பு

திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிக் கொடுத்து படிப்பதிலேயே தடுக்கி விழுந்து விடுகிறார். அகழாய்வு என்பதற்கு அகவாழ்வு என்று கூறுகிறார். திமுக ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி. ஸ்டாலின் மருமகன் சபரீசனால் இயக்கப்பட்டு வருகிறது. அங்கு திமுககாரர்களுக்கு வேலையில்லை என்று தகவல்கள் வருகின்றது. அண்ணா காலத்தில் இருந்த திமுக சமத்துவம் மற்றும் ஜனநாயகம் பேசியது. இப்போது அவர்கள் குடும்பத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறது.

அனைத்து தரப்பு மக்களிடமும் தமிழ் திரைப்படங்கள் சென்றடைய வேண்டுமெனில், திரையரங்கு கட்டணத்தை குறைக்க வேண்டும். திரையரங்கு கட்டணங்களை முழுமையாக குறைத்தால் மட்டுமே திருட்டு விசிடியை ஒழிக்க முடியும்.

இடைத்தேர்தல் வெற்றியானது, அதிமுகவுக்கு மேலும் உத்வேகம் அளித்துள்ளது' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details