புரூஸ்லீ குறித்த காட்சிகளால் ஹாலிவுட் இயக்குநர் குவெண்டின் டாரண்டினோ படத்தை சீனாவில் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பல்ப் பிக்ஷன், கில் பில்ல போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஹாலிவுட் இயக்குநரின் லேட்டஸ்ட் படம் 'ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்.' லியானார்டோ டிக்காப்ரியா, பிராட் பிட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் அமெரிக்காவில் ரிலீசாகி வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது.
இந்தப் படத்தை சீனாவில் வரும் 25ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்தில் ரிலீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.