இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’பாரம்’ திரைப்படம் நேற்று வெளியானது. இப்படத்தில் ராஜூ, சுகுமார் சண்முகம், சுப முத்துக்குமார், ஸ்டெல்லா கோபி, ஜெயலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை பிரியா கிருஷ்ணசாமியுடன், அர்தரா ஸ்வரூப் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டு, படத்திற்கு போஸ்டர் ஓட்ட பணமில்லை என்றார்கள், அதனால் தான் சொந்த காசில் போஸ்டர் அடித்து தானே, சென்று ஓட்டுவதாக அறிவித்தார். இதை கேட்ட சிலர் மிஸ்கின் மேடைக்காகதான் இப்படி பேசுகிறார் என்று விமர்சனம் செய்தனர்.