தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மனசு இருக்கிறவங்களுக்கு எல்லாம் விருமனைப் பிடிக்கும் - இயக்குநர் முத்தையா - viruman latest uopdate

மனசு இருக்கிறவங்களுக்கு எல்லாம் விருமனைப் பிடிக்கும் என அப்படத்தைப் பற்றி இயக்குநர் முத்தையா மனம் திறந்து பேசியுள்ளார்.

viruman-movie
viruman-movie

By

Published : Jan 15, 2022, 6:54 PM IST

சமீப காலமாகக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத் தேர்வுசெய்து நடிகர் கார்த்தி நடித்துவருகிறார். இந்நிலையில், நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக்கின் அடுத்த படத்தை கொம்பன் பட இயக்குநர் முத்தையா இயக்குகிறார். இதில் ராஜ் கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ஆகியோர் நடிக்க இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

விருமன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிக்கிறார். எஸ்.கே. செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீடு குறித்து படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

கார்த்தி - முத்தையா

இந்நிலையில், 'விருமன்' பட இயக்குநர் முத்தையா இப்படம் குறித்து கூறுகையில், “என் எதிர்த்த வீட்டில் நடந்த சம்பவம். வாழ்க்கையில் எல்லோரும் தவறுகள் செய்வார்கள். அந்தத் தவறுகளை யாராவது தட்டிக் கேட்கணும். அப்பா, அம்மா, அண்ணன், அக்கான்னு யாரோ ஒருத்தர் அதைச் சுட்டிக்காட்டணும். நமக்கு நல்லது செய்யும் அந்த உறவுதான் நல்ல உறவு. அந்த நேர்மையைப் பேச வருபவன்தான் 'விருமன்'. தட்டிக் கேட்கிறவனாக 'விருமன்' இருப்பான். 'விருமன்' தான் கார்த்தி. குலசாமி பெயர். விருமன்னா தேனிப்பக்கம் பிரம்மன் என்று சொல்வாங்க. அதுதான் கதைக்களம்.

விருமனாக கார்த்திக் கதாபாத்திரம்

”சாதுவாகவும்... முரடனாகவும் எப்படி வேணும்னாலும் கார்த்தி சாரை காட்டலாம். அவர் டைரக்டர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இதில் எல்லாமே உறவுகள்தாம். இந்த மண்ணோட மனிதர்கள் முன்னாடி எப்படியிருந்தாங்க, இன்றைக்கும் அப்படித்தான் இருக்கணும்னு சொல்றவன்தான் விருமன். உறவுகள் சூழ ஒற்றுமையோடு இருந்து, அவர்களுக்குப் பிரச்சினைனா முன்னாடி நிற்கிறவன் விருமன்தான்.

நான் எழுதினதைவிட, சொன்னதைவிட நடிச்சுக் காட்டியதைவிட, எதிர்பார்த்ததைவிட அனைவரும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள். வன்முறை ஏரியாவைக் குறைச்சு ஃபேமிலி, ஆக்‌ஷனில் கவனம் செலுத்தியிருக்கேன்.

விருமன்

கதாநாயகி தேன்மொழி

உறவுகளை மீறி வேறு எதுவும் இங்கே இல்லை. எங்கே போனாலும் இங்கேதான் வந்து சேரணும். விருமன் உங்களோட இணைஞ்சு நிற்பான். விருமனைப் பார்த்தால் எல்லோருக்கும், அவர்களுக்குப் பிடித்தமான இருவரை நினைத்துக் கொள்வார்கள். மறந்துபோன உறவு மனசுல வரும். நியாயங்களை, உறவுகளை எளிதில் காணக்கூடிய மனிதர்களை முன் நிறுத்தி இருக்கேன். அவ்வளவுதான்.

டைரக்டர் ஷங்கர் சாரோட பொண்ணு, தேன்மொழி என்கிற கேரக்டர்ல அசத்தியிருக்காங்க. செட்ல, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ்ன்னு பார்த்தாலே பெரிய மரியாதையாக இருக்கும். பந்தல் பாலுன்னு கருணாஸ், குத்துக்கல்லுன்னு ஒரு கேரக்டரில் சூரி நடித்திருக்கிறார். இவர்களுடன் வசுமித்ரா, மனோஜ், ஆர்.கே. சுரேஷ், மைனா நந்தினின்னு நல்ல கேரக்டர்கள் நிறைய.

விருமன்

அம்மாவாக சரண்யா. அவங்கதான் கதையே. குணம் கெட்ட மனுஷங்களால் இந்தக் குலமே அழியுது. அப்படி யாரும் இருந்திடக் கூடாதுன்னு சொல்ல இத்தனை பேரும் முன்னே நிக்க வேண்டியிருக்கு. வடிவுக்கரசி தேனி ஜில்லாவோட பழம்பெரும் கிழவியாக, மிடுக்கா நடை உடை பாவனையில் வாழ்ந்திருக்காங்க" என்றார்.

இதையும் படிங்க : தனுஷின் 'மாறன்' மோஷன் போஸ்டர் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details