'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ், தற்போது தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி இருக்கிறார். இதில், தனுஷடன் லால், ரெஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் கர்ணன் படத்தின் பாடல்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தையடுத்து மாரி செல்வராஜ் அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார்.
ஆண் குழந்தைக்கு தந்தையான இயக்குநர் மாரி செல்வராஜ்! - மாரி செல்வராஜ் படங்கள்
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் - திவ்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிசெல்வராஜின் மனைவி திவ்யாவுக்கு வளைகாப்பு நடைபெற்றது. அப்போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போத, இந்த தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. கையில் குழந்தையை வைத்திருக்கும் மாரி செல்வராஜின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மாரி செல்வராஜ் - திவ்யா தம்பதிக்கு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த குழந்தையைத் தவிர இவர்களுக்கு நவ்யா என்ற பெண் குழந்தையும் இருக்கிறது.