தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இயக்குநர் மகேந்திரன் கவலைக்கிடம் - kollywood

திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்குநர் மகேந்திரன்

By

Published : Mar 27, 2019, 8:10 PM IST

தமிழ் சினிமாவில் 'முள்ளும் மலரும்', 'ஜானி', 'உதிரிப்பூக்கள்' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் மகேந்திரன். இவர் இயக்கிய 'உதிரிப்பூக்கள்' திரைப்படம் தமிழ் சினிமாவின் தலைசிறந்த படமாக கருதப்படுகிறது. விஜய் நடித்த தெறி படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார்.

இந்நிலையில், இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மகேந்திரன் கடந்த ஒரு வார காலமாக காய்ச்சலால் அவதிப்பட்டுவந்துள்ளார். காய்ச்சல் தீவிரமானதால் இவருக்கு பன்றிக்காய்ச்சல் இருக்குமோ என்ற சந்தேகமும் நிலவுகிறது.

தற்போது, அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துமருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு தீவிர கண்காணிப்பில் உள்ளதாக ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தனது தந்தை பூரண குணம் பெற பிரார்த்தனை செய்யுமாறும் ஜான் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு திரை பிரபலங்கள் பலரும் ஜான் மகேந்திரனுக்கு ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details