அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி, எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள்” என குறிப்பிட்டிருந்தார்.
உங்களைப் போன்ற நல்ல தலைவர் கிடைப்பதற்கு நாங்கள் தகுதியற்றவர்கள் -இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்! - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் செய்திகள்
உங்களைப் போன்ற நல்ல தலைவர் கிடைப்பதற்கு நாங்கள் தகுதியற்றவர்கள் என நடிகர் ரஜினிகாந்த் அரசியல் முடிவு குறித்து அறிவித்துள்ளது தொடர்பாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்
இந்நிலையில் இது குறித்து ட்வீட் செய்துள்ள இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “தலைவா..வருத்தப்பட வேண்டாம். ஒரு வேளை உங்களைப் போன்ற ஒரு நல்ல அரசியல் தலைவரைப் பெற நாங்கள் தகுதியற்றவர்களாக இருக்கலாம். நீங்கள் எங்களுக்கு முக்கியம் உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...'என்னை மன்னியுங்கள்' - ரஜினிகாந்த்!