தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ராம்' கைவிடப்பட்டதா? - இயக்குநர் ஜீத்து ஜோசப் விளக்கம்

மோகன் லால் நடிப்பில் உருவாகிவரும் 'ராம்' திரைப்படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளத்தில் பரவிவந்த செய்திகளுக்கு அப்படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் முடிவுரை எழுதியுள்ளார்.

Mohanlal Ram
Mohanlal Ram

By

Published : May 21, 2020, 10:15 AM IST

மோகன் லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் 2013ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் 'த்ரிஷ்யம்'. திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்தப் படம் மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான இப்படம் மோகன் லாலின் திரையுலக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றது.

இந்த நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 'ராம்' என்னும் புதிய படத்தை ஜீத்து ஜோசப் இயக்குவதன் மூலம், அவர் மீண்டும் மோகன் லாலுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளார்.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனியார் ஹோட்டல் ஒன்றில் படப்பிடிப்பின் பூஜை நடைபெற்றது. கேரளாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை ஏறக்குறைய படக்குழு முடித்துவிட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வெளிநாடுகளில் எடுப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது கரோனா தொற்று காரணாமாகப் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் 'ராம்' படத்தை ஜீத்து ஜோசப் கைவிட்டதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜீத்து ஜோசப் தனது பேஸ்புக் பக்கத்தில், "மோகன் லால் நடிக்கும் 'ராம்' படத்தைக் கைவிட்டு அடுத்த படத்தை திட்டமிடுகிறேன், என்று கடந்த சில நாள்களாகவே செய்திகள் வலம்வந்து கொண்டிருக்கின்றன. கரோனா பரவல் காரணமாக 'ராம்' படத்தின் வேலைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. பிரிட்டன், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் கரோனா நெருக்கடி குறைந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கப்படும்.

இயக்குநர் ஜீத்து ஜோசப் பேஸ்புக் பதிவு

உலகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்திய ஒரு சில இடங்களில் கேரளாவும் ஒன்று என்பதால், அங்கு படப்பிடிப்பு விரைவில் தொடங்க வாய்ப்புகள் உள்ளன. இதனை மனதில் வைத்து, கேரளாவிலேயே மொத்தப் படப்பிடிப்பையும் நடத்தும் வகையில், கதை ஒன்றை நான் யோசித்து வருகிறேன். அதற்காக 'ராம்' திரைப்படத்தை நான் கைவிட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. தற்போதைய சூழல் காரணமாக படப்பிடிப்பு தாமதமாகியுள்ளது அவ்வளவுதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே மோகன் லால் ரசிகர்கள் 'த்ரிஷயம் 2' வருமா என இயக்குநரிடம் கேட்டுவந்த நிலையில், இந்தப் பதிவில் கேரளாவிலேயே மொத்தம் நடக்கும் ஒரு படத்தை தான் யோசித்து வருவதாக கூறியது 'த்ரிஷயம் 2' படத்திற்கான கதையாக இருக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

இதையும் படிங்க: 'திரிஷ்யம்' இயக்குநரின் மிரள வைக்கும் 'த பாடி' ட்ரெய்லர்!

ABOUT THE AUTHOR

...view details