தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஊரடங்கை ஆவணமாக்கிய பரத் பாலாவின் 'மீண்டும் எழுவோம்' - பரத் பாலாவின் படங்கள்

இயக்குநர் பரத் பாலாவின் மீண்டும் எழுவோம் என்ற பெயரில் கரோனா ஊரடங்கை ஆவணப்படமாக எடுத்துள்ளார்.

பரத்பாலா
பரத்பாலா

By

Published : Jun 5, 2020, 4:03 PM IST

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் அத்தியாவசியத் தேவைகளைத் தாண்டி எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். அனைவருடைய வாழ்க்கையிலும் இந்த ஊரடங்கை மறக்கவே முடியாது. இதுவொரு திருப்புமுனை.

இதை வரும் தலைமுறைகளுக்காக நாம் எப்படிச் சொல்லப் போகிறோம் என்பது அனைவருடைய மனதிலே இருந்தது. அதை இயக்குநர் பரத்பாலா குறும்படமாக செயல்படுத்தியுள்ளார். பரத்பாலா ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து 'வந்தே மாதரம்', 'ஜன கன மன', காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான அதிகாரப்பூர்வ காணொலி என, அவர் உருவாக்கிய அனைத்துமே மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை.

தற்போது இந்த கரோனா ஊரடங்கை 'மீண்டும் எழுவோம்' என்ற பெயரில் ஆவணப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த தலைமுறையினர் கரோனா ஊரடங்கைத் தெரிந்துகொள்ளும் வகையில், சுமார் 117 பேர் கொண்ட 15 குழுக்களும் இதுவரை பார்த்திராத தேசிய ஊரடங்கை தங்கள் கேமராக்களில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

மீண்டும் எழுவோம் ஆவணப்படத்தின் காட்சிகள்.

கண்டிப்பாக வரும் தலைமுறையினர் கண்ணுக்குத் தெரியாத ஒரு நோய் தொற்றால் இந்தியா எப்படி முழுமையாக ஸ்தம்பித்தது என்பதைத் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இந்தப் படப்பிடிப்புக்கான தலைமைக் கட்டுப்பாட்டு அறையை மும்பையில் அமைத்தோம். அங்கு ஒரு குழு, 14 மாநிலங்களில் பல்லாயிரம் கிலோ மீட்டர் பயணித்து படம்பிடித்த காட்சிகள் அனைத்தையுமே இந்தக்குழுவினர் ஒருங்கிணைத்துள்ளனர்.

களத்திலிருக்கும் குழுக்கள் வாட்ஸ்-அப் வீடியோ கால், ஜும் செயலி உள்ளிட்ட தொழில்நுட்பம் வாயிலாக படமாக்கப்பட்டது. தேவைப்படும் காட்சிகளை இங்கிருந்து கூற அதனைப் படக்குழுவினர் முழுக்க தொழில்நுட்பம் வாயிலாகவே இந்தியா முழுவதும் காட்சிப்படுத்தி சாதனை புரிந்துள்ளனர்.

சுமார் 4 நிமிடங்கள் கொண்ட இந்த ஆவணப்படம் கண்டிப்பாக இந்தியாவின் கரோனா ஊரடங்கைப் பார்ப்பவர்களுக்கு எடுத்துரைக்கும். ஊரடங்கிலிருந்து பொருளாதார இழப்பிலிருந்து எப்படி மீண்டு வந்துள்ளோம் என்பதை வரும் தலைமுறையினர் கண்டிப்பாக உணரும் வகையில் இடம்பெறும்.

ஜூன் 6ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் 4 நிமிட தொகுப்பினை அனைத்து ஊடகங்களுக்கும் ஜூன் 13ஆம் தேதி வரை நேரடியாக, முழுவதும் எடிட் செய்யாமலும் அளிக்கப்படும். லிங்கினை எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என, விர்டுவல் பரத் நிறுவனம் சார்பாக அறிவிக்கப்படுகிறது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details