தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 15, 2021, 7:21 AM IST

ETV Bharat / sitara

டிக்கிலோனா சக்ஸஸ் மீட்- கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

டிக்கிலோனா வெற்றி விழாவில் சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

டிக்கிலோனா
டிக்கிலோனா

நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம், 'டிக்கிலோனா'. கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் - சோல்ஜர் பேக்டரி இணைந்து தயாரித்த இப்படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார்.

இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் அகனா, ஷிரின் ஆகியோர் நடித்துள்ளனர். சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில், டைம் மெஷினை மையமாக வைத்து வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

டிக்கிலோனா படக்குழுவினர்

இருப்பினும் படம் முழுவதும் வழக்கம்போல் சந்தானம் தனது நகைச்சுவையால் நிரப்பியதால் அவரது ரசிகர்கள் டிக்கிலோனாவை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் 'டிக்கிலோனா' படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் சந்தானம், இயக்குநர் கார்த்திக் யோகி உள்ளிட்டோர் கலந்துகொண்டு படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:வெள்ளை முடியை மறைக்காதது ஏன்? - தந்தைக்கு சமீரா தந்த பதில்

ABOUT THE AUTHOR

...view details