லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் சமீபத்தில் தனது உடல் எடையைக் குறைத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
இந்நிலையில், சோனாக்ஷியை கைது செய்யும் காணொலி இணையத்தில் ட்ரெண்டாகிவருகிறது. உண்மையிலேயே சோனாக்ஷி சின்ஹாவை காவல் துறையினர் கைது செய்தனரா அல்லது அடுத்த படத்தின் புரோமோ வீடியோவா என்ற குழப்பநிலையில் ரசிகர்கள் இருந்தனர்.
இந்தக் காணொலி வெளியானதையடுத்து #alisona arrested என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டானது. மேலும், ஒரு பிரபல நடிகரின் மகள் கைதானது எப்படி, என்ன குற்றம் செய்தார் என்ற கேள்விகள் இணையதளவாசிகளை துளைத்தெடுத்தது.
தற்போது இது குறித்து சோனாக்ஷி தனது இன்ஸ்டாகிராமில், தோழர்களே நான் கைது செய்யப்படுவதுபோல் வைரலாகும் காணொலியில் இருப்பது நான்தான். ஆனால் அது உண்மையல்ல. விரைவில் இது எதற்கு என்பதை விளக்குகிறேன் என பதிவிட்டார்.
இதனையடுத்து, சோனாக்ஷி கைது செய்யப்படுவது டபாங் படத்தில் எடுக்கப்பட்ட காட்சி என தெரியவந்துள்ளது. அதன் இரண்டாவது காணொலியில் சோனாக்ஷி சிரித்தபடி நடந்து செல்லும் காணொலி வெளியானது. இதைப் பார்த்த பின்பு இணையதளவாசிகள் நிம்மதியடைந்தனர்.