தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

படப்பிடிப்பில் தல தளபதி திடீர் சந்திப்பு! - vijay

சென்னை: நடிகர் விஜய், மகேந்திர சிங் தோனி ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ள புகைப்படங்கள் வைரலாகிறது.

தளபதி - தல
தளபதி - தல

By

Published : Aug 12, 2021, 2:29 PM IST

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கிவரும் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

'பீஸ்ட்' படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் சென்னை வந்த தோனியின், விளம்பர பட படப்பிடிப்பும் கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெறுகிறது.

தளபதி - தல

அப்போது தல தோனி, நடிகர் விஜய்யை அவரது கேரவனில் சந்தித்து பேசியுள்ளார். இருவரும் உரையாடிக் கொண்டு இருந்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.

தளபதி - தல

சில நிமிடங்கள் பேசிவிட்டு தல தோனி அவரது கேரவனுக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையொட்டி #ThalapathyVijay #ThalaDhoni ஆகிய ஹேஷ்டாக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.

இதையும் படிங்க:மீண்டும் பாலா இயக்கத்தில் அதர்வா!

ABOUT THE AUTHOR

...view details