தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று (மே.02) வெளியானது. இதில் திமுக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி அமைக்கிறது . முதல் முறையாக முதலமைச்சராகப் பதவியேற்க இருக்கும் மு.க. ஸ்டாலினுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டாலின், உதயநிதிக்கு தனுஷ் வாழ்த்து! - latest cinema news
சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியடைந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.
அந்தவகையில் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார். அதில், “தனிப்பெரும் வெற்றி பெற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம். மக்கள் பணி சிறக்க எமது வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வென்ற உதயநிதிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் தனுஷ். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “முதல் முறையாக மக்கள் பணிசெய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நண்பர் உதயநிதி ஸ்டாலினுக்கு எமது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.