தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

என் சகோதர்கள் சகோதரிக்கு செய்யும் கடமையில் இருந்து தவறியதில்லை - கார்த்திகா - தனுஷ் புதுப்பேட்டை 2

தனுஷ் தனது சகோதரியின் மகனை மடியில் அமர வைத்து மொட்டை அடித்து தனது தாய்மாமன் கடமையை நிறைவேற்றியுள்ளார்.

Dhanush
Dhanush

By

Published : Mar 12, 2020, 12:16 PM IST

நடிகர் தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'கர்ணன்', கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'ஜகமே தந்திரம்', ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனது மூன்றாவது இந்தி திரைப்படமான 'அத்ரங்கி ரே' உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இதற்கிடையில் தனுஷூம் தனது சகோதருமான செல்வராகவனும் தங்களுது சகோதிரி கார்த்திகாவின் குழந்தைகளுக்கு மொட்டையடிக்கும் நிகழ்ச்சிக்காக சமீபத்தில் திருப்பதிக்குச் சென்றனர். அங்கு கார்த்திகாவின் குழந்தையை தனுஷ் மடியில் அமரவைத்து மொட்டையடித்துள்ளனர்.

மருமகனுடன் தனுஷ்

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கார்த்திகா தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், எனது குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் அவர்களது மாமாக்களின் அன்பு அளப்பெரியது. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகள் இந்த நேரத்திற்காக காத்திருந்தேன்.

என் மகன்களின் தலை முடி என்னை விட மிக நீளமாக இருந்தது. இவை அணைத்தும் நல்லது. குடும்பத்தினருடன் திருப்பதியில் ஒரு திவ்ய தரிசனம். என் சகோதர்கள், ஒரு நாளும் சகோதரிக்கு செய்யும் கடமைகளில் இருந்து தவறியது இல்லை என்று பதிவிட்டிருந்தார்.

தனுஷூம் செல்வராகவனும், தங்களது மருமகன்களை மடியில் வைத்து மொட்டையடித்து காது குத்திய போது எடுத்த புகைப்படம் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட டாம் ஹாங்ஸ்

ABOUT THE AUTHOR

...view details