தனுஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி 'பட்டாஸ்' படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனிடையே தனுஷ் - கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் 'சுருளி' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், 'பரியேறும் பெருமாள்' பட இயக்குர் மாரி செல்வராஜ் இயக்கும் 'கர்ணன்' படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப்படத்தில் நடிகர்கள் லால், நட்டி, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மலையாள நடிகை ரஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் உருவாகிவரும் 'கர்ணன்' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் திருநெல்வேலியில் உள்ள பூஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெறுகிறது. இதனிடையே இதன் படப்பிடிப்புப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாகவும், வரும் பிப்ரவரி மாதம் முடிவடையும் என்றும் படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.