கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாறன்’. தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்துக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
'மாறன்' திரைப்படம் அடுத்தமாதம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பொல்லாத உலகம்’ பாடல் வீடியோ நேற்று முன்தினம் (ஜன. 26) யூ டியூபில் வெளியிடப்பட்டது.