இதுகுறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "18 ஆண்டுகாலமாக நண்பர்களாக, தம்பதியாக, பெற்றோராக ஒருவருக்கொருவர் புரிதலுடன் வாழ்ந்துவந்தோம். இன்று நாங்கள் ஒரு மனதாக பிரிந்துவாழ முடிவு செய்துள்ளோம்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு பிரிகிறேன்; தனுஷ் - Aishwarya Rajinikanth divorce
23:13 January 17
நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு பிரிவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
எங்களது முடிவை மதித்து, இதனை ஏற்றுக்கொள்ள எங்களுக்கு தனியுரிமையை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். இதேபோன்ற பதிவை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, சமந்தா- நாகசைதன்யா தம்பதி அதிகாரப்பூர்வமாக பிரிவதாக அறிவித்ததை தொடர்ந்து, இந்த சம்பவம் தென்னிந்திய திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். குறிப்பாக இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 18 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு யாத்ரா ராஜா, லிங்கா ராஜா என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இதையும் படிங்க:தொடர்ந்து ஓடிடியில் வெளியாகும் தனுஷ் படங்கள்