தனுஷ் தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘சுருளி’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'கர்ணன்' என பிஸியாக இருக்கிறார். இதனையடுத்து தனுஷின் 43ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
#D43 அப்டேட்: 'கர்ணன்' தனுஷ்...'மாஃபியா' கார்த்திக் நரேன்...'அசுரன்' ஜிவி பிரகாஷ் - mafia movie release date
இயக்குநர் கார்த்திக் நரேன் தனுஷை வைத்து #D43 படத்தை இயக்கவிருப்பதாக அதிகராப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
D43
தற்காலிகமாக '#D43' என தலைப்பு வைத்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சத்யா ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவத்துள்ளது.
விரைவில் படத்தில் நடிக்கவுள்ள பிற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.