வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்து கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் 'அசுரன்'.
எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலைத் தழுவி வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். கலைப்புலி எஸ். தாணு தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்தார்.
அசுரன் படத்தில் தனுஷூடன் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சிறந்த தமிழ் படம், சிறந்த நடிகர் என இரண்டு பிரிவுகளில் அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
அசுரன் தெலுங்கில் 'நாரப்பா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷூம் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் பிரியாமணியும் நடித்திருந்தார்.
அரசுன் படப்பிடிப்பின் போது இந்நிலையில், அசுரன் திரைப்படம் வெளியாக இன்றுடன் (அக்.4) இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை தனுஷின் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
சில படங்களின் கதாபாத்திரங்கள் காலங்கள் கடந்தும் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பெற்றிருக்கும் அப்படி அசுரனின் சிவசாமியும் சிதம்பரமும் ரசிகர்கள் மனதில் இருந்து மறையமாட்டார்கள்.
அசுரன் படத்தில் வரும் வசனங்கள் பல அழுத்தமானதாகவும் இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் தேவையானதாக இருக்கிறது. ' பகைய வளர்க்க நெனைக்காத கடக்க பழக்கிக்க...', நம்ம கிட்ட காசிருந்த புடுங்கிக்குவானுவ நிலமிருந்த எடுத்துக்குவானுவ, படிப்ப மட்டும் ஒன்னும் செய்ய முடியாது, படிச்சு அதிகாரத்துக்கு வா, அதிகாரத்துக்கு வந்து அவன் உனக்கு செஞ்சத நீ யாருக்கும் நடக்கவிடாம பாத்துக்க போன்ற நீளமான வசனங்கள் தனுஷின் நடிப்பை மேலும் மெருகேத்தின.
இதையும் படிங்க: தேசிய விருது அசுரன் தனுஷ் - ரசிகர்களின் ஒப்பீடு!