பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களை தொடர்ந்து வெற்றிமாறனும் தனுஷும் மீண்டும் இணையும் படம் 'அசுரன்'. வழக்கம்போல வேல்ராஜ் ஒளிப்பதிவு, கலை இயக்கம் ஜாக்சன், சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜி.வி.பிரகாஷ் இசை என, தன்னுடைய 'ஹிட் டீம்' உடன் படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகராக அறிமுகமாகிறார். அதேபோன்று வெற்றி மாறன் கூட்டணியில் நடிகர் பசுபதி, மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் புதிதாக இணைந்துள்ளனர்.
கிராமத்து அசுரனாக தனுஷ் - மிரட்டலான புதிய லுக் புகைப்படங்கள் வைரல்! - asuran movie
வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடிக்கும் 'அசுரன்' படத்தில் புதிய கெட்-டப் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை எனும் நாவலை மையமாக கொண்டு, அசுரன் படத்தின் திரைக்கதை அமைத்துள்ளார் வெற்றி மாறன். 60-களின் தொடக்கம், 80-களின் நடுவில் என்று இரண்டு காலக்கட்டங்களில் கதை நகருகிறது. இப்படத்தில் அப்பா-மகன் என இரண்டு கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் குற்றாலத்தில் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. குறுகிய கால தயாரிப்பான இப்படம், விரைவில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், அசுரன் படத்தின் புதிய ஸ்டில்கள் வெளியாகியுள்ளன. அதில் ரத்த கறையுடன் கையில் அரிவாளுடன் கண்களில் கோபம் கொப்பளிக்க தனுஷ் வீரநடை போட்டு வருவது போன்றும், முறுக்கிய மீசையுடன் இயல்பாக திரும்பி பார்ப்பது போன்றும் உள்ளது. இந்த இரண்டு புகைப்படங்களும், தர லோக்கலான கிராமப்புறங்களில் சுற்றும் 45வயது மதிக்கக்தக்க நபரை கண் முன் நிறுத்துகிறது. அதனால் அந்த வயதிற்கேற்ப தனுஷ் கொஞ்சம் உடம்பை ஏற்றியுள்ளதாக தெரிகிறது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.